முப்பத்தைந்து நாட்கள் – நாற்பத்தைந்து டிகிரி.

போன மாசம் என் தம்பியோட கல்யாணத்துக்காக இந்தியா போயிருந்தேன். அமெரிக்கால, மே மாசம் வரைக்கும் நீண்ட நீநீநீநீளமான குளிர் காலத்தில இருந்து சுட்டெறிக்கற கோடைகாலத்துக்கு போய்ட்டு வந்தேன். இருவத்தஞ்சு, முப்பது டிகிரி செல்யியஸ்ல இருந்து போயி, நாப்பத்தஞ்சு டிகிரி வெய்யில்ல முப்பத்தஞ்சு நாள் இருந்தேன்.

பிடித்த குறள்கள் மாதிரி Blog எழுத ஆரம்பிச்சதுல இருந்தோ, இல்ல, 7 Habits மாதிரி புத்தங்கள படிச்சதுல இருந்தோ தெரியல, யாரையும் பத்தி கொற சொல்றதுக்கு முன்னாடி, அந்த எடத்துல நான் இருந்திருந்தா என்ன பண்ணியிருப்பேன்-னு யோசிச்சுப் பாக்கறேன். அதுனால, இந்தியால ‘எங்கப் போனாலும் ஒரே கும்பல்’, ‘யாரும் எங்கேயும் ஒரு வரிசையை .·.பாலோ பண்றதே இல்ல’, ‘எங்கப் போனாலும் லஞ்சம்’, ‘எல்லா எடத்துலயும் ஒரே பொல்யூஷன்’, ‘யாருமே ட்ரா.·.பிக் ரூல்ஸ்ஸ .·.பாலோ பண்றது இல்ல’ அப்படின்னெல்லாம், அமெரிக்கால இருந்து இந்தியா போறவங்க (சிலபேர்) வழக்கமா சொல்ற கம்ப்ளைய்ண்ட்ஸ் எதுவும் சொல்லாம, இருக்கறத இருக்குற எடத்துல இருந்து பார்த்தேன். நம்ம ஊர் மக்கள கொற சொல்லாம, அவங்கள்ல ஒருத்தனா இருந்து என்ன நானே கவனிச்சேன். அமெரிக்கால இருந்து போயி இந்தியாலயே செட்டில் ஆனா எப்படி இருப்பேன்-ங்கறதுக்கு ஒரு ரிகர்சல் மாதிரி.
அமெரிக்கால, தெனமும் A/C-ய போட்டுட்டு, 4 லேன் ரோட்ல கார்ல போய்ட்டு, இந்தியால ட்ரா·பிக் ரூல்ஸ்-ஸ யாரும் .·.பாலோ பண்றது இல்ல-ன்னு கொற சொல்றது தப்பு பாருங்க. அதுனாலதான், அவங்களோட சேர்ந்து கார் ஓட்டினென். பைக் ஓட்டினேன். பஸ்ல போனேன். என்னையும் என்னைச் சுத்தி நடக்கற விஷங்களையும் கவனிச்சேன். மனசை பாதிச்ச விஷங்களைப் பத்தி கொஞ்சம் ஆழமா யோசிச்சேன்.

இந்த அஞ்சு வாரத்துல நான் எப்படி இருந்தேன், என்ன .·.பீல் (feel) பண்ணினேன்-ங்கறதயெல்லாம் யார் கிட்ட சொல்லுவேன்?? sarav.net-டோட Premium வாசகர் உங்க கிட்டதான்!!! :)