தமிழர்கள்-தவசிகள்.

மனச பாதிச்ச விஷயங்கள்ல முக்கியமானதா சொல்லணும் நெனைக்கறது ‘போஸ்டர்’களைத்தான். சினிமா போஸ்டர்கள், வார இதழ்களின் விளம்பரங்கள், அரசியல் மீட்டிங் போஸ்டர்கள்-னு நெறைய போஸ்டர்கள். சினிமா போஸ்டர்கள்ல நடிகைகளோட கவர்ச்சிப் படங்கள். பெரிய பெரிய சைஸ்ல. மூலைக்கு மூலை. நடிகையின் மேல் தொடையோட மேல் பகுதிவரை தெரியற படத்த zoom பண்ணி மூலைக்கு மூலை பாத்தா easy-யா போயி மூளைல பதிஞ்சுடுது. அதுமட்டும் இல்ல, Adults only படங்களோட போஸ்டர்கள் வேற. ஒரு பெண் ரேப் செய்யப்படறது போல ஒரு படத்தோட போஸ்டர்கள், நடிகைகளின் அங்கங்கள zoom செங்சு போடப்பட்ட போஸ்டர்கள்-னு நெறைய போஸ்டர்கள். மக்களோட மனசுல காமத்தை விதைக்கக்கூடிய போஸ்டர்கள். பள்ளிக்கூட வாசல்கள்ல, கோவில் சுவர்கள்ல-ன்னு ஒரு எடம் பாக்கியில்லாம எல்லா எடத்துலயும்.

சிம்ரனோட இடுப்போ, கிரணோட வயிறோ பெரிய ரகசியம் ஒன்னும் இல்ல. எப்போ Sun TV யையோ இல்ல வேற எந்த மியூசிக் சேனலையோ போட்டாலும் நம்ம வீட்டு ஹால்ல இருந்தே பாத்துடலாம். ஆனா அதையே zoom பண்ணி ஒவ்வொரு தெரு மூலைலயும் போட்டா மக்களோட மனச, குறிப்பா மாணவர்களோட மனச, இளைஞர்களோட மனச பாதிக்காதா? என்னோட மனசுல ஏதோ ஒரு ‘மாதிரியான’ பாதிப்ப ஏற்படுத்துச்சு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மனசுல, மற்ற இளைஞர்கள் மனசுல ஏற்படற பாதிப்புகள் எப்படி வெளியாகும்-ன்னு நெனைக்கறீங்க?

Road-ல போற மற்ற பொண்ணுங்கள பாக்கற பார்வை எப்படி இருக்கும்ன்னு நெனைக்கறீங்க? மனசுல வெதச்ச காம விதைகள் கண்கள்ல கிளைகள் விடாதா?? Eve டீசிங்-க பத்தி யோசிக்கறவங்க இதப் பத்தில்லாம் யோசிக்கறாங்களா??

சினிமா போஸ்டர்கள் மட்டும் இல்ல. வார இதழ்களோட விளம்பரங்களும் இப்படித்தான் இருக்கு. ‘சுஜாதா’ எழுதும் புதிய தொடர், ‘பாலகுமாரன்’ எழுதும் கதைகள், ‘பட்டுக்கோட்டை பிரபாகர்’ எழுதும் புதிய தொடர்கதை, இப்படில்லாம் விளம்பரம் பண்ணின காலம் போயி, ‘தளுக் நடிகை’யின் திடீர் காதல். ‘குளுக் நடிகை’யின் விவாகரத்து, ‘படப்பிடிப்பில் பலாத்காரம்’-ன்னு இப்படில்லாம்தான் விளம்பரங்கள் வருது. அட்டைப் படங்களின் தரம்கூட ரொம்ப கொறஞ்சு போச்சு. நடிகைகளோட முகங்களைக் காட்டிலும் உடல் அங்கங்கள முக்கியப்படுத்தற மாதிரி படங்கள்தான் அட்டைப் படங்களா வருது. ‘ஆனந்த விகடன்’ மாதிரி முன்னனி வார இதழ்களும் இதுக்கு விதிவிலக்கு இல்ல.

என்ன கேட்டா, திரைப்படங்களுக்கு ‘சென்சார்’ இருக்கறமாதிரி திரைப்பட போஸ்டர்களுக்கும் ‘சென்சார்’ வரணும்.
‘போஸ்டர்’கள எங்க வேணும்னாலும் ஒட்டலாம்ங்கறதுக்கு ஒரு தடை வரணும்.
‘Adults Only’ படங்களோட போஸ்டர்கள வெளில ஒட்டறதுக்கு ஒரு தடை விதிக்கணும்.

ஒவ்வொரு மூலைலயும் அழுக்காக்கப் படற மனசுகளோட கம்பேர் பண்ணிப் பாத்தா நம்மூர்ல நடக்கற Eve டீசிங்-களோட எண்ணிக்கை கம்மின்னுதான் சொல்லுவேன்.
இவ்ளோ அழுக்கோடயும் ஒழுக்கத்தோட இருக்குற ஒவ்வொரு தமிழனும் ‘தவசி’தான்.

Note: I didn’t have Camera to click all those posters. So I took the same images from behindwoods.com and vikatan.com.