அவசரம்.

நம்ம ஊர் மக்கள்ட்ட எப்பவும் ஒரு அவசரத்த பாத்தேன். நான் போன .·.ப்ளைட் சென்னை போயி எறங்குனதுல இருந்தே கவனிச்சேன். என் நண்பன் ஒருத்தன நாங்கல்லாம் கிண்டல் பண்ணுவோம். ‘ஏன்டா எப்பவும் கால்ல சுடுதண்ணிய ஊத்திக்கிட்ட மாதிரி குதிக்கற’ன்னு. அதுமாதிரி, மக்கள்ட்ட ஒரு அவசரம் எப்பவும் ஒட்டிக்கிட்டே இருக்கு.
ஒரு கடைல ஐஸ் க்ரீம் வாங்கறதா இருக்கட்டும், தியேட்டர்ல சமோசா வாங்கறதா இருக்கட்டும், Road-ல Bike ஓட்றதா இருக்கட்டும் எல்லாத்துலயும் ஒரு அவசரம். ஐஸ் க்ரீம் ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சு சாப்டா தொண்டைல எறங்காதா?? இல்ல அஞ்சு நிமிஷத்துக்குள்ள சமோசா சாப்டலன்னா நாக்கு கழண்டு விழுந்துடுமா-ன்னு யாரும் யோசிக்கறது இல்ல.
சென்னைக்கு போன விமானத்துல என்கூட வந்த மக்கள்டயே இந்த அவசரத்த பார்த்தேன். விமானம் தரையிறங்கி, ரன்-வே-ல ஓடி, ஏர்போர்ட்-ல வந்து நிக்கறவரைக்கும் உக்காந்திருக்கற சீட்டவிட்டு எழுந்திருக்கக் கூடாது. பயணிகளோட சே.·.ப்டிக்காக சீட் பெல்ட்-ட போட்டுகிட்டு சீட்லயே உக்காட்ந்திருக்கணும்-ன்னு சொல்றாங்க. நான் வந்த விமானத்தோட சக்கரம் தரையத் தொட்ட அடுத்த விநாடி ஒரு அம்பது பேரு வந்து கதவு பக்கத்துல நின்னுட்டாங்க. வெளில போக அவசரம். ரன்-வே-ல ஓடி வந்து நிக்க ஒரு பத்து நிமிஷம் ஆகும். எல்லாரும் வெளில வர ஒரு பத்து நிமிஷம் ஆகும். அதுக்குள்ள அவசரம். வெளில இவங்களுக்காக அப்துல் கலாம் காத்துகிட்டு இருக்கற மாதிரி.
லக்கேஜ் வர்றதுக்காக அரைமணி நேரம் காத்திருக்கறவங்க, ஒரு பத்து நிமிஷம், ‘அதுவும் அவங்க சே.·.ப்டி’க்காக, .·.ப்ளைட் வந்து நிக்கறவறைக்கும் சீட்லயே உக்காந்திருக்க முடியல.

விடியக் காலைல முனு மணிக்கு .·.ப்ளைட் வருது. அவசரம் அவசரமா, முட்டி மோதிக்கிட்டு, மத்தவங்களயெல்லாம் இடிச்சு தள்ளிகிட்டு, க்யூல நைசா குறுக்க நொழைஞ்சு, ஒருவிதமான டென்ஷனோட வெளில வந்தா, நாலு மணிக்கு வரலாம். கொஞ்சம் பொறுமையா முன்னாடி இருக்கறவருக்கு வழி விட்டுட்டு வந்தா, நாலரை மணிக்கு வரலாம். சீக்கிரமா வெளில வந்து, இந்த அரை மணிநேரத்துல என்ன பண்றோம்-ன்னு யோசிச்சுப் பாத்தா பொறுமை வரும். நாம யோசிக்கறது இல்லயே.

அதேமாதிரி, Bike-ல ஏறி, அவசரம் அவசரமா ஓட்டி, ரெட் சிக்னல்ல நிக்காம, ஒன்வேல புகுந்து வீட்டுக்கு போறோம். போயி என்ன பண்றோம்? Sun Music பாக்கறோம். பொறுமையா ஓட்டி ஒரு பத்து நிமிஷம் லேட்டா போனா என்னத்த மிஸ் பண்ணிடுவோம்?

இந்த அவசரம் ஒரு சின்ன விஷயமா தெரியல. எங்கல்லாம் அவசரமா ஒரு வேல செய்யறோமோ அங்கல்லாம் சட்டத்த முறிக்கறோம் (We Break the Rules). ரெட் சிக்னல்ல நிக்கணும்-ங்கறது சட்டம். .·.ப்ளைட் நிக்கறவரைக்கும் சீட்ல உக்காந்திருக்கணும்-ங்கறது சட்டம். ஒன்வேல போகக்கூடாதுங்கறது சட்டம்.
எங்க நம்மளால சட்டத்த முறிக்க முடியலயோ, அங்க லஞ்சம் கொடுத்து முறிச்சுடறோம். நாலு நாள்ல லைசன்ஸ் வேணுமா? லஞ்சம். பத்து நாள்ல பாஸ்போர்ட் வேணுமா? லஞ்சம். அவசரமா டிக்கெட் வேணுமா? லஞ்சம்.

இவ்ளோ அவசரமா இருக்கவறங்க, அவசரமா ஒரு வெதை வெதச்சு, அவசரமா ஒரு செடி வளத்து, அவசரமா ஒரு பூ பூக்க வைங்களேன். அவசரமா ஒரு கொழந்த பெத்துக்கோங்களேன். அவ்ளோ ஏங்க, அவசரமா ஒரு இன்ச் முடி வளருங்க? அரை இன்ச் நகம் வளருங்க??