Traffic – தமிழர் விதிகள்.

ஊர்ல ஒவ்வொரு Traffic சிக்னல்கள்லயும் இப்போ டிஜிட்டல் கவுண்ட்டர்கள் இருக்கு. பாபா கவுண்ட்டௌன் மாதிரி ஒவ்வொரு சிக்னலும் கவுண்ட்டௌன் பண்ணுது. ரெட் சிக்னல் விழுந்த உடனே ஒரு கவுண்ட்டௌன் ஆரம்பிக்குது. 90, 89, 88, 87-ன்னு. க்ரீன் சினலுக்கும் அதே மாதிரி கவுண்ட்டௌன். அமெரிக்கா, கனடா மாதிரி நாடுகள்ல கூட இதுமாதிரி சிக்னல்கள நான் பாத்ததில்ல.
ரெட் சிக்னல் விழுந்து 90, 89, 88-ன்னு கவுண்ட்டௌன் ஆரம்பிச்சதுமே, நெறைய பேர் கார் இன்ஜின, பைக் இன்ஜின Off பண்ணிடறாங்க. கவுண்ட்டௌன் 7, 6, 5 -க்கு வந்தப்புறம் Start பண்ணிக்கறாங்க. பெட்ரோலும் மிச்சமாகுது, அந்த டைம்ல இன்ஜின் பொக இல்லாததால பொல்யூஷனும் கம்மியாகுது. Smart Idea.

அப்படி ஒரு ட்ரா.·.பிக் சிக்னல்ல ரெட் சிக்னல் கவுண்ட்டௌன் 90, 89 ன்னு ஆரம்பிச்சவொடனே கார் இன்ஜின Off பண்ணிட்டு, கண்ண மூடிகிட்டு அப்டியே…யோசிக்க ஆரம்பிச்சேன். ‘இயக்குனர் ஷங்கர் படங்கள்லோட Climax-லல்லாம் வர்ற மாதிரி நம்ம ஊர் ட்ரா.·.பிக் சீரா இருந்தா எப்டி இருக்கும்?’-ன்னு யோசிக்க ஆரம்பிச்சேன். இந்தியன் படத்தோட climax, அந்நியன் படத்தோட climax எல்லாம் ஞாபகம் வந்துது. ட்ரா.·.பிக்கெல்லாம் ஒரே பக்கமா, கோட்டுக்குள்ள ஒழுங்கா வரிசைய நிக்குது. ட்ரா.·.பிக் கூட்டத்துல ஒருத்தரா நடிகர் ‘விக்ரம்’ வரிசைல நின்னு எல்லோரையும் ஆச்சரியமாவும் சந்தோஷமாவும் பாத்துக்கிட்டு இருக்காரு. திடீர்ன்னு டால்பி டிஜிட்டல் சர்ரௌண்ட் சவுண்டுல ஒரு பயங்கரமான சத்தம். பின்னாடி நின்னுகிட்டு இருந்த கார், பைக், ஆட்டோ எல்லாரும் ஒரே நேரத்துல ஹாரன் அடிக்கறாங்க. அட, நடிகர் ‘விக்ரம்’-க்கு பின்னாடி நின்னுட்டு இருந்தவங்க இல்லீங்க. எனக்குப் பின்னாடி நின்னுகிட்டு இருந்தவங்க. ரெட் கவுண்ட்டௌன் முடிஞ்சு க்ரீன் கவுண்ட்டௌன் ஆரம்பமாயிடுச்சு. உடனே கார Start பண்ணிட்டு அங்க இருந்து களம்பிட்டேன்.

நீங்க சொல்லுங்க. இயக்குனர் ஷங்கர் பட Climax-கள்ல வர்ற மாதிரி, இல்ல அமெரிக்கா கனடா நாடுகள் மாதிரி நம்ம ஊர் ட்ரா.·.பிக் மாறுமா?

ஆர் யூ ஷ்யூர்??

என் பதில கடசீல சொல்றேன்.

ஒருநாள் மதியம் ஒரு 12.30 மணிக்கு வீட்ல இருந்து கிளம்பி, US-க்கு திரும்ப வர்ற டிக்கெட் விஷயமா, Travel Agent ஒருத்தரப் பாக்க வெளில போனேன். பைக்ல. நல்ல வெய்யில். ஒரு நாப்பது நாப்பஞ்சு டிகிரி இருக்கும். கொஞ்சம் வேர்க்க ஆரம்பிச்சிருந்தது. மொதல்ல ஒரு சிக்னல்ல போயி நின்னேன். லெ.·.ப்ட்ல ஒரு பஸ். முன்னாடி ஒரு பத்து பதினஞ்சு பைக். சுத்திலும் ஒரு ரெண்டு மூனு ஆட்டோ. எல்லா வண்டிகளும் சேர்ந்து விடற பொகைல சூடு இன்னும் அதிகமாயிருந்துச்சு. அடுத்த சிக்னலுக்கு போனப்போ இன்னும் நெறைய பேர் நின்னுட்டு இருந்தாங்க. க்ரீன் சிக்னல் கவுண்ட்டௌன் ஆரம்பிச்சு, 5, 4, 3 -ன்னு கொறஞ்சு 0 -க்கு வந்து, ரெட் சிக்னல் விழுந்தப்போ சரியா அந்த intersection கிட்ட இருந்தேன். நான் என் பைக்க நிறுத்திட்டேன். ஆனா எனக்கு பின்னாடி வந்தவங்கள்ல ஒரு பத்து பைக்கும், ஒன்னு ரெண்டு ஆட்டோவும் நிக்காம போய்ட்டாங்க. அதுல ஒருத்தன் என்னத் தாண்டி போயி திரும்பி ‘ஆர் யூ க்ரேசி’ அப்டிங்கற மாதிரி பாத்துட்டு போனான். ரெட் சிக்னல்ல நிக்காம போறாங்களே-ன்னு வருத்தம் இருந்தாலும். அந்த வெய்யில்ல, அந்த சூட்ல நிக்கணும்-ங்கறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது.
ரெட் சிக்னல் 45 ல இருந்து கொறஞ்சு 12, 11 வந்துச்சு. நின்னவங்க எல்லோரும் களம்ப ரெடியாய்ட்டாங்க. 7 6 வந்த ஒடனேயே முன்னாடி இருந்த பைக்கெல்லம் களம்பி போக ஆரம்பிச்சுட்டாங்க. நானும், சிக்னல மதிக்கற இன்னொரு நாலஞ்சு பைக் மட்டும்தான் நின்னோம். அவ்ளோ நேரம் நின்னவங்களுக்கு அந்த ஆறு நொடிகள் நிக்க முடியல!! அவ்ளோ அவசரமா எங்கதான் போறாங்களோ.
சிக்னல மதிக்காம போறவங்கள்ல அனேகமானவங்க பைக் ஓட்றவங்க. அடுத்து ஆட்டோ ஓட்றவங்க, முக்கியமா கார்ப்பரேஷன் பஸ் ஓட்றங்க. பஸ் ஓட்றங்க சிக்னல்ல நிக்கணும்னா, பஸ்-க்கு முன்னாடி, பஸ் போக முடியாத அளவுக்கு மத்தவங்கல்லாம் நின்னாத்தான் உண்டு. இல்லன்னா, எந்த பஸ் ட்ரைவரும் ரெட் சிக்னல மதிக்கறதே இல்ல.
இதுல முக்கால்வாசி மக்களுக்கு ரெட் சிக்னல்ல நிக்காம போறதோட அபாயம் தெரியல. அத தெரியவச்சாலெ போதும். நிப்பாங்க.

Pages: 1 2