கேப்டன் ட்ரீம்.

அரசியல் போஸ்டர்கள்ல அதிகமான, அனேகமான போஸ்டர்கள் கேப்டனுக்காத்தான். கேப்டன் விஜயகாந்த் புதுக் கட்சி ஆரம்பிச்சிருக்காரு. கட்சி பேரு தெரியல. ஆனா கொடி ரெடி. செப்டம்பர்ல மதுரைல மாநாடு நடத்தறாரு. அதுக்கான போஸ்டர்கள்தான் எங்க பார்த்தாலும். போஸ்டர்கள்ல அதுக்குள்ள மாநிலச் செயலாளர், மாவட்டச் செயலாளர் அப்டின்னு நெறைய பேரு இருக்காங்க.
தமிழ்நாட்டுக்கு இன்னொரு அரசியல் கட்சி தேவையா?? இல்ல மக்களுக்கு சேவை செய்யற கட்சி தேவையா??
ரெண்டுக்கும் நெறைய வித்தியாசம் இருக்கு. இன்னொரு அரசியல் கட்சி, பத்து பதினைஞ்சு MLA-க்களயும், ரெண்டு மூனு MP க்களையும் மட்டும் வெச்சுகிட்டு, மத்த கட்சிகளோட கூட்டணிக்கு பேரம் பேசி, மினிஸ்டர் பதவிக்கு பேரம் பேசி, மேல மேல பணம் சம்பாதிக்கற கூட்டம். அவங்க சிந்தனை அடுத்த எலக்ஷன்லயும், கூட்டணி வெச்சுக்கறதுலயும், அடுத்த கூட்டணிய கவுக்கறதுக்கு திட்டம் போடறதுலயும்தானே தவிர மக்களப்பத்தி அவங்களுக்கு கவலையில்ல.

மக்களுக்கு சேவை செய்யற கட்சி, மக்களோட தேவைகள தெரிஞ்சு அவங்களுக்கு நாலு நல்லது பண்றது. காவேரி தண்ணி, நதிநீர் இணைப்பு இதுக்கெல்லாம் ஒரு வழி பண்ணினாலே தமிழ்நாடு செழிப்பாய்டும். கேப்டன் என்ன பண்ண போறாரு? இப்போ இருக்குற கட்சிகள்ல இருந்து மாறுதல் வேணும்ன்னு நெனைக்கற மக்கள கேப்டன் திருப்திப்படுத்துவாரா?? காத்திருந்துதான் பாக்கணும்.
கட்சிக் கொடிலயே சிவப்பு, கறுப்பு, மஞ்சள்ன்னு மத்த கட்சிகளோட சாயம் இருக்கு. கொள்கைகள்ல புதுமை இருக்குமா??