தமிழ் முதலைகள்.

என் நண்பன் ஒருத்தன், ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சென்னைல ஒரு வீடு வாங்கியிருக்கான். அஞ்சாவது மாடில வீடு. சுமார் நானூறு ஐநூறு வீடுகள் இருக்குற காம்ப்ளெக்ஸ் அது. எல்லாமே ஆறு மாடிகள் கொண்ட கட்டிடங்கள். ரெண்டு வருஷம் கழிச்சு இப்போதான் தெரியுது எல்லா கட்டடங்கள்லயும் நாலு மாடி வரைக்கும் கட்றதுக்குத்தான் கவர்மெண்ட்ல இருந்து பர்மிஷன் வாங்கியிருக்காங்க. அதுக்கு மேல ரெண்டு மாடிக்கு பர்மிஷன் வாங்கவே இல்ல. காம்ளெக்ஸ சுத்தியும் இருக்குற Road, நூறடி Road-ஆ இல்லன்னா ஆறுமாடிக்கு பர்மிஷன் கொடுக்கக்கூடாதுன்னு சட்டம் இருக்கு. இந்தக் காம்ளெக்ஸ சுத்தி இருக்குற Road எல்லாமே சின்ன Roadகள்தான். எப்படி பர்மிஷன் கொடுப்பாங்க? பர்மிஷன் வாங்காத வீடுகளுக்கு எலக்ட்ரிக் கனெக்ஷன் எப்படி கொடுத்தாங்க? தண்ணி கனெக்ஷன் எப்படி கொடுத்தாங்க? கழிவு நீர் கனெக்ஷன் எப்படி கொடுத்தாங்க? லஞ்சம்தான். நாலாவது அஞ்சாவது வீடுகளுக்கு எலக்ட்ரிக் கனெக்ஷன் கொடுக்க 25000 ரூபாய், தண்ணிக்கும், கழிவுநீர்க்கும் தலா 10000 ரூபா வாங்கியிருக்காங்க பில்டிங் கட்டினவங்க. நூறு நூத்தம்பது வீட்டுல 45000 ரூபா. கணக்கு பண்ணிப் பாருங்க. கோடிக்கணக்கான ரூபாய முழுங்கியிருக்காங்க இந்த முதலைகள். பகல் கொள்ளையடிச்சிருக்காங்க. வீட்டு ஓனர்கள்லாம் சேர்ந்து கேஸ் போட்ருக்காங்க. கேஸ் ஒரு பத்து வருஷம் நடக்கும்.
நைட்ல வீடு புகுந்து கொள்ளையடிக்கற கும்பல்கள வலபோட்டு தேடற போலீஸ், இந்த முதலைகள, பகல் கொள்ளைக்காரங்கள என்னப் பண்ணப் போகுது??
இதுமாதிரி இன்னும் எத்தனை முதலைகளோ? எத்தனை காம்ப்ளெக்ஸ் கட்டியிருக்காங்களோ??