உதிரிப் பூக்கள்.

நான் இந்தியால இருந்தப்போ நடந்த மற்ற முக்கியமான நிகழ்ச்சிகள்.

திருவாசகம் in சிம்.·.பனி.
இளையராஜா ரசிகர்களால ரொம்ப எதிர்பாக்கப்பட்ட ‘சிம்.·.பனியில் திருவாசகம்’ CD-ய ஜுன் முப்பதாம் தேதி ‘மியூசிக் அகாடமி’ல வெளியிட்டாங்க. பாலமுரளி கிருஷ்ணா, ரஜினி, கமல், பாரதிராஜா, AR ரகுமான், MSV உள்பட நெறைய VIPக்கள் வந்திருந்தாங்க. வெளியீட்டுவிழா, மறுநாள் ‘தமிழன் TV’ சேனல்லயும், ‘SS Music’ சேனல்லயும் ஒளிபரப்பாச்சு. இளையராஜா ரொம்ப எமோஷனலாவும், Excited-ஆகவும் இருந்தாரு. பாலமுரளி கிருஷ்ணா உள்பட, CDய கேட்ட பலபேர் கண்ணு கலங்கிட்டதா சொன்னாங்க.

சேது சமுத்திரம்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடுல இருக்குற கடல் பகுதிய ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்துக்கு ஏதுவா பண்ற Project-டோட துவக்க விழா நடந்தது. இதன் மூலம் இந்தியாவோட கிழக்குக் கடற்கறையிலிருந்து மேற்குக்கடற்கறைக்குப் போக இலங்கையை சுத்திட்டு வரணும்-ங்கற அவசியம் இல்லை. கப்பல் போக்குவரத்து அதிகமாறதால பொருளாதார வளர்ச்சி அதிகமாக வாய்ப்புள்ளது. துவக்க விழாவில் தமிழக முதல்வர் மிஸ்ஸிங். More details on this project.

ஹாஸ்பிடல்.
சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு நேர் எதிர்ல ஒரு பிரம்மாண்டமான மருத்துவமனை கட்டியிருக்காங்க. திறப்பு விழாக்கு முதல்நாள் அந்தப் பக்கமா போகும்போது பார்த்தேன். மறுநாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா திறந்து வெச்சாங்க. தமிழ்நாட்ட சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மிஸ்ஸிங். மருத்துவமனை இருக்கிற பகுதியோட MP தயாநிதி மாறன் மிஸ்ஸிங். தன்னை கேட்காமலேயே விழா இன்விடேஷன்ல பேர் போட்டுட்டதா MP கம்ப்ளைண்ட் பண்ணினார். Apart from the political issues.. Chennai has got a new Hospital.

மெட்டி ஒலி.
பெண்களோட பேராதவைப் பெற்ற ‘மெட்டி ஒலி’ மெகாத் தொடர் (ஒருவழியா) முடிஞ்சிருச்சு. அதுக்காக சிறப்பு நிகழ்ச்சி, நேரடி ஒளிபரப்பு-ல கேள்வி பதில், கலைஞர் தலைமைல பாராட்டுவிழா-ன்னு அசத்தினாங்க. ‘அப்பாடா!!!’-ன்னு ஒரு நிம்மதிய நெறைய ஆண்கள்கிட்ட பாத்ததா மறுநாள் செய்திதாள்ல கார்ட்டூன்கள் போட்டிருந்தாங்க.