மனிதருள் மாணிக்கம்.

நான் இந்தியா போன .·.ப்ளைட்ல ஏற வெய்ட் பண்ணிட்டு இருந்தப்போ, manic (மாணிக்கம்)-ன்னு ஒருத்தர சந்திச்சேன். எந்த ஊருக்கு போறீங்க? எங்க வேலை பாக்கறீங்க-ன்னு சாதாரணமா பேசிட்டு இருந்தோம். ஏதோ Business பண்றதா சொன்னாரு. ‘Amway’ வா இருக்குமோன்னு நெனைச்சு கொஞ்சம் தள்ளி உக்காந்தேன். நல்லவேல, இல்ல. சாதாரணமா பேசிட்டு இருந்தவரு திடீர்னு உணர்ச்சிவசப்பட்டு பேசினாரு. ‘இந்தியால லஞ்சம் எப்போ ஒழியுதோ அப்போதான் ‘அந்த’ நாடு உறுப்படும்’-ன்னாரு. ‘ஆமாங்க’-ன்னு தலையாட்டினேன். கொஞ்ச நேரத்துல .·.ப்ளைட்ல ஏறிட்டோம். அடுத்து அவர சென்னைல எறங்கும்போதுதான் பாத்தேன். அவசரமா வெளில போக துடிச்சுகிட்டு இருந்தாரு. அவரோட Hand Luggage-அ ஸ்கேன் பண்ணும்போது ஏதோ எலக்ட்ரானிக்ஸ் இருக்குன்னு சாக் பீஸால மார்க் பண்ணிட்டாங்க. ‘Baggage Claim’ல வெய்ட் பண்ணிட்டு இருக்கும்போது, ப்போர்ட்டர் மாதிரி ஒருத்தன் வந்து சாக் பீஸ் மார்க்க காட்டி ஏதோ பேசினான். இவரும் ஏதோ பேரம் பேசினார். அவரோட பெட்டி வந்த ஒடனே ரெண்டு பேருமா சேர்ந்து வெளில போனாங்க. வெளில போயி சில ‘டாலர்’கள எடுத்து அந்த ப்போர்ட்டர் கைல ‘தள்ளி’ட்டு நடைய கட்டிட்டாரு. ‘இந்தியா உறுப்பட ஒன்ன மாதிரி செல பேர் போதும்யா’-ன்னு நெனைச்சுக்கிட்டேன். நீ மாணிக்கம் இல்லய்யா, நீதான்யா ‘மனிதருள் மாணிக்கம்’-னு அவருக்கு ஒரு விருது கொடுத்தேன்.

இதே விருத இன்னும் சிலபேர் வாங்கினாங்க.

சென்னை, ஆர்காடு ரோட்ல, வடபழனி பஸ் ஸ்டாண்ட்ல இருந்து ஒரு 200 அடி தூரத்துக்குள்ள, விஜயா ஹாஸ்பிடல் பக்கத்துல ஒருத்தர், வீட்ல இருந்து களம்பும்போது நெறைய தண்ணி குடிச்சிருப்பார் போல, Road ஓரமா நின்னு, ரெண்டுபக்கமும் பாத்துட்டு, ‘அவசரமா’ zip-அ கழட்டி, ‘மனிதருள் மாணிக்கம்’ விருது வாங்கிட்டாரு.
வெளிநாடுகள்ல இருந்தும், வெளிமாநிலங்கள்ல இருந்தும் சென்னைக்கு வந்து வேல பாக்கறவங்கல்லாம், தமிழ் கத்துகிட்டப்புறம்தான் சென்னை சாலைகள்ல Drive பண்ணனும்-ங்கற ஒரே நல்லெண்ணத்துல(?), Sign Board-ல இருக்குற Hindi, English எழுத்துகள் மேலெல்லாம் ‘தார்’ அடிச்சு வெச்சிருக்கும் நல்ல உள்ளங்களுக்கெல்லாம் ‘மனிதருள் மாணிக்கம்’ விருது கொடுக்க வேண்டாமா??
அவசரமா லைசன்ஸ் வாங்கணும்-ங்கறதுக்காக, 30 ரூபா கொடுத்து வாங்க வேண்டிய Leaner’s license-க்கு 200 ரூபாயும், 200 கொடுத்து வாங்கவேண்டிய license-க்கு 1400 ரூபாயும் கொடுத்த ‘ராசா’ வீட்டுப் பொண்ணு ஒன்னுக்கு அவசரமா ‘மனிதருள் மாணிக்கம்’ விருதும் கொடுக்க வேண்டியதாயிடுச்சு.
‘Traffic – தமிழர் விதிகள்’ பத்தி எழுதறேன்-ன்னு சொல்லிட்டு ‘Driving License’ இல்லாம ஊர்ல பைக் ஓட்டினவருக்கு, கார் ஓட்டினவருக்கு நிச்சயமா ‘மனிதருள் மாணிக்கம்’ விருது கொடுத்தே ஆகணும்.