சுஜாதாவின் ‘பதினாலு நாட்கள்’.

நான் இந்தியால இருந்தப்போ, ‘முப்பத்தஞ்சு நாட்கள் இந்தியா ட்ரிப்’-ப பத்தி Blog எழுதணும்-ன்னு ஒரு thought எப்பவும் மனசுல ஓடிட்டெ இருந்துச்சு. ஒருநாள் ஒரு புக் ஸ்டோர் போனப்போ, சுஜாதா அவர்கள் எழுதின ‘பதினாலு நாட்கள்’ புத்தகம் பளிச்-ன்னு கண்ல பட்டுது. சரி, முப்பத்தஞ்சு நாள் பத்தி எழுதறதுக்கு இந்தப் ‘பதினாலு நாட்கள்’-ல இருந்து ஏதாவது ஐடியா கடைக்குமேன்னு வாங்கிட்டு வந்தேன்.

ஆனா, இந்தப் ‘பதினாலு நாட்கள்’ ஒரு சந்தோஷமான டூர் பத்தியோ, ஒரு ஜாலியான சுற்றுலா பத்தியோ இல்ல. பாகிஸ்தானோட இந்தியா போர் செஞ்ச பதினாலு நாட்கள் பத்தினது. போர் விமானம் ஓட்ற தமிழ்நாட்டு விமானியான ‘குமார்’ அப்படிங்கறவரோட பதினாலு நாள் வாழ்க்கை பத்தினது. போருக்காக அவர் வீட்ல இருந்து களம்பின நாள்ல இருந்து போர் முடிஞ்ச நாள் வரைக்குமான கதை. போருக்காக அவருக்கு கொடுக்கப்பட்ட Training, இந்தியாவோட போர் திட்டங்கள், பைலட் குமாரோட மனநிலை-ன்னு எல்லாத்தையும் சிறப்பா சொல்லியிருக்காரு சுஜாதா.

நான் ரொம்ப ரசிச்ச ரெண்டு காட்சிகள சொல்றேன்.

காட்சி 1.
பைலட் குமார் பாகிஸ்தான் படைகள தாக்கறதுக்காக .·.ப்ளைட்ல களம்பிட்டாரு. 5000 அடி உயரத்துல பறந்துகிட்டு இருக்காரு. இன்னும் சில நிமிஷங்கள்ல எதிரிகள தாக்க ஆரம்பிக்கணும். இந்த சில நிமிஷங்கள்ல பைலட் குமாரோட மனசுல ஓடற எண்ண ஓட்டங்கள சொல்றாரு.

குமாரின் விமானம் சற்றுப் புதிதான விமானம். அதன் செயல்கள் சற்று இறுக்கமாக இருந்தன. பழகிவரும் அவன் 5000 அடியில் பறந்துகொண்டிருந்தான். தாழப் பறக்க இன்னும் சமயம் வரவில்லை. இன்னும் சில நிமிஷங்கள் உள்ளன. நிமிஷங்கள் அவனுக்கு வெள்ளம்! மஞ்சு! அவள் என்ன செய்துகொண்டிருப்பாள்! இந்நேரம் எழுந்திருப்பாள். நான் அருகில் படுத்திராவிட்டால் அவளுக்கு தூக்கம் வராது. ஏன், பலதினங்கள் நான் எழுவதற்கு முன் எழுந்து என்னையே, நான் தூங்குவதையே பார்த்துக்கொண்டிருப்பாள், மெலிதாக நெற்றியில் முத்தமிடுவாள்.

குமார் தன்னை உலுக்கிக் கொண்டான். பெண்டாட்டியைப் பற்றி நினைக்க என்ன என்ன வினோதமான இடம். எத்தனைப் பாடங்கள்! இந்தக் கணக்கிற்குமுன் எத்தனை பயிற்சிகள், பாகிஸ்தானிடம் இருக்கும் விமானங்கள் ஒவ்வொன்றின் அமைப்பயும் அவன் கனவில் கூடச் சொல்வான். கான்பெர்ரா மிக் 19, எ.·.ப் 104, மிராஜ், எ.·.ப் 80 ஸோபர். மஞ்சு பில்டரைத் தட்டி சத்தம் போடுவாள். பங்களாதேஷின் விமான நிலையங்கள் ஒவ்வொன்றும் வானத்திலிருந்து எப்படித் தோன்றும் என்பதை ரிகானஸன்ஸ் எடுத்த நூற்றுக் கணக்கான படங்களை ஆராய்ந்திருக்கிறான். மஞ்சுவைக்கூட போட்டோவைப் பார்த்துதான் சம்மதம் தெரிவித்தான். “உன் தொடையில் இத்தனை பெரிய மச்சம் இருக்கும் என்று கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லியிருக்க வேண்டாமா!”. ஜெஸ்சூரின் ஜனத்தொகை தெரியும் அவனுக்கு. மஞ்சு பிறந்த சீரங்கத்தின் ஜனத்தொகை? பத்தாயிரமா ஜெஸ்சூர் கண்டோன்மெண்ட் எங்கிருக்கிறது? காரிஸன் எங்கிருக்கிறது? குடி தண்ணீர் தேக்கங்கள் எங்கிருக்கின்றன? எல்லாம் தெரியும் மஞ்சுவின் உடம்பின் ஒவ்வொரு அங்கமும் தெரியும். அதேபோல டாக்கா கோமில்லா மைமன்சிங் குல்னா. மஞ்சு.
அவன் விரல்களின் ஆணைக்காக அத்தனை சக்திகள் காத்திருக்கின்றன. அவன் தொட்டால் சீறித் துடிக்கப் போகிற இரண்டு 30 மில்லி மீட்டர் கன்கள். பன்னிரண்டு ராக்கெட் சாதனங்கள். ஹரி, அவன் சொன்னால் கேட்கவே மாட்டான். அவனுக்கு ஆபத்து ஏற்பட்டால் உடனே அவன் விரும்பினால் அவனைத் தூக்கி எறிந்து பாராச்சூட் விரிய வைக்கக்கூடிய ‘பேல் அவுட் சாதனம்’ மஞ்சு தன் மாங்கல்யத்தில் மஞ்சள் தடவுவாளா? அவன் சுடப்போகும் திறமையைப் போட்டோ பிடிக்கக்கூடிய தானாக இயங்கக்கூடிய காமிரா சாதனம் ஹரி! சிரி பார்க்கலாம். எங்கே சிரி? சிரிடா சிரி? க்ளிக்! “அப்பா எப்பவாவது சிரித்தால்தானே அவன் சிரிக்கப் போகிறான்?”

ஜெஸ்சூர் செல்லும் பாதை, மரங்களின் மறைவின் ஊடே ஒளிந்து மறைந்து தெரிந்தது. அதில் இந்தியத் தளவாடங்கள் நிழலில் மலைப்பாம்பு நகருவது போல் முடிவில்லாமல் நகருவது தெரிந்தது. வரப் போகிறது. இறங்க வேண்டும்.

இலக்கை நோக்கி இறங்குகிறார்.

போருக்கு போற ஒரு விமானியோட சிந்தனைகள் என்னென்ன, குடும்பத்த அவர் எவ்ளோ மிஸ் பண்றாரு, அவர் விமானத்துல என்னென்ன ஆயுதங்கள் இருக்கு, என்னென்ன பாதுகாப்பு ஐட்டங்கள் இருக்கு, விமானியோட இலக்குகள் என்னென்ன, விமானிக்கு என்னென்ன திறமைகள் இருக்கு, அவரோட மனைவிக்கு எங்க மச்சம் இருக்குன்னு இவ்ளோ விஷயங்கள கோர்வையா எவ்ளோ சூப்பரா சொல்லியிருக்காருல்ல!!

காட்சி 2 : அடுத்தப் பக்கம்.

Pages: 1 2