‘சேது’வாகாத சேது கனவு.

1860 வது வருஷம், சுமார் 165 வருஷத்துக்கு முன்னாடில இருந்து, ஆங்கிலேய கமாண்டர் டெய்லர்ல ஆரம்பிச்சு பலபேரோட கனவா இருந்த சேது சமுத்திரம் திட்டம் இப்போ நனவாகப் போகுது. 165 வருஷக் கனவு நனவாகப் போகுதுன்னு பெருமையா இருந்தாலும், ஒரு நல்ல திட்டத்த செயல்படுத்த 165 வருஷம் ஆகுதுன்னு நெனைச்சா கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கு.

நாட்டுக்கு இப்படி ஒரு நல்லது பண்ணியிருக்கோம்-ங்கற சந்தோஷத்தையோ, திருப்தியையோவிட, இதன் மூலமா அரசியல் லாபம் தேடற எண்ணங்கள்தான் நம்ம ஊர் அரசியல்வாதிகளோட பேட்டிகள்ல அதிகமா தெரியுது. ‘இந்த வருஷத்துல நாங்க ஆட்சில இருந்தப்போ இந்தத் திட்டத்துக்கு இப்படி ஒழச்சோம்’, ‘அந்த வருஷத்துல நாங்க ஆட்சில இருந்தப்போ அப்படி ஒழச்சோம்’-ன்னு மாத்தி மாத்தி ஸ்டேட்மெண்ட் விட்டுக்கறாங்க.

1959 வது வருஷத்துல பண்ணியிருந்தா ரூபாய் 1.8 கோடிலயும், 1963-ல பண்ணியிருந்தா ரூபாய் 23 கோடிலயும் பண்ணியிருக்கவேண்டிய இந்தத் திட்டத்துக்கு இப்போ ரூபாய் 2500 கோடிக்கும் மேல செலவு செய்யறோம்.

எப்படியோ, இந்த ‘சேது’ கனவு கண்டவங்களையெல்லாம் வெறும் ‘சேது’க்களா ஆக்காம, இந்தத் திட்டம் நிறைவேறர வரைக்கும் சந்தோஷம்தான்.

கைகொடுத்த தெய்வம் படத்துல சிவாஜி, பாரதியார் மாதிரி மேக்கப் போட்டுட்டு, பத்துபேர் சேர்ந்து சாம்பிராணி போட்ட மாதிரி சுத்தியும் பொகையோட, கம்பீரமா ஒரு பாட்டு பாடுவார் ஞாபகம் இருக்கா?

சிந்து நதியின்மிசை நிலவினிலே
சேர நன்நாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
.
.
சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

இந்தப் பாட்ட எழுதினது பாரதியாரான்னு தெரியல. இதுல வர்ற ‘சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’ நனவாகப் போகுது. அதே மாதிரி ‘வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால’ மையத்து நாடுகள்ல பயிர் செய்யற கனவு நிறைவேற இன்னும் எந்தனை வருஷம் காத்திருக்கணுமோ தெரியல!!

சேது சமுத்திரம் திட்டத்த செயல்படுத்தக் காரணமான எல்லாருக்கும், எல்லா கட்சி அரசியல்வாதிகளுக்கும், எல்லா அதிகாரிகளுக்கும், மற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கறேன். ‘ஆல் த பெஸ்ட்’.