வள்ளுவரும் குடும்ப அரசியலும்.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.

பொருள் : அரசாங்கத்திற்கு நிதி சேர்க்கும் திட்டங்களை தீட்டி, வரும் வருவாயைப் பெருக்கி, அதை தீய வழிகளில் செலவிடாமல் பாதுகாத்து, நல்ல வழிகளில் திட்டமிட்டு செலவு செய்யும் அரசே நல்ல அரசாகும்.

இயற்றல்.
அரசாங்கத்துக்கு பணம் வேணும்னா வரிய ஏத்தறதோ, இல்ல பஸ் ரயில்களோட டிக்கெட் கட்டணத்த ஏத்தறது மட்டும் இல்லாம இன்னும் கொஞ்சம் கிரியேட்டிவா யோசிக்காலாமோ!!
உதாரணத்துக்கு, அமெரிக்கால போலீஸ்களுக்கு அவங்க கலெக்ட் பண்ற அபராதங்கள்ல இருந்தே, பாதி சம்பளம் கொடுக்கலாம்ன்னு நெனைக்கறேன். ஓவர் ஸ்பீடா போனா அபராதம். ரெட் சிக்னல்ல நிக்கலன்னா அபராதம், லைட் எறியலன்னா அபராதம், இன்னும் நெறைய.
அதேமாதிரி, அமெரிக்க விசா வேகமா, அவசரமா வேணுமா? ப்ரீமியம் ப்ராசஸிங்-ன்னு ஒன்னு கொண்டுவந்தாங்க. சாதாரண வேகத்தோட படு ஸ்பீடா விசா கொடுத்தாங்க. $1000 (சுமாரா ரூபாய் 43,500) அதிகமா கொடுக்கணும்.

ஈட்டல்
நெறைய நல்ல திட்டங்கள் செயல் படுத்தணும்-னு வரும்போது சரியா வர்றதில்ல. வரி வசூலிக்கறதுல கூட, பில்லோட வேணும்னா பத்து ரூபா, பில்லு வேணாம்னா எட்டு ரூபான்னா, எந்த கஸ்டமர் பில் வேணுங்கறாங்க. திட்டம் போடறோதோட இல்லாம சரியா செயல் படுத்த வேணாமா?

காத்தல்
அரசாங்கத்துக்கு வர்ற பணத்த எந்த அரசாங்கமாவது சேமிக்குதா? இல்ல எங்கயாவது முதலீடு செய்யுதா?
சுனாமி மாதிரி பேரழிவு வந்தா பொருள் இழப்புகள சமாளிக்க எந்த அரசாங்கமாவது கட்டடங்களயோ, கட்டுமரங்களையோ Insure பண்ணுதா?

காத்த வகுத்தல்.
அரசாங்கத்துக்கு வர்ற பணத்த நல்ல வழிகள்ல, மக்களுக்கு உபயோகப்படற மாதிரி செலவு செய்யறது.

இது நாலும்தான் அரசோட அடையாளங்கள்!!!

அரசு?
வள்ளுவர் சொல்ற அரசு, அரசாங்கம் மட்டும் இல்ல. இல்லத்தரசிகளுக்கும் அரசர்களுக்கும் கூட பொருந்தும். குடும்பத்தோட வருமானம் என்ன? அத எப்படி அதிகப்படுத்தலாம், எப்படி காக்கலாம், என்னென்ன தேவையில்லாத செலவுகள கொறைக்கலாம், எப்படி சேமிக்கலாம், முதலீடு செய்யலாம் அப்படின்னெல்லாம் திட்டம் போட்டு அத சரியா செயல் படுத்தறதுதான் நல்ல குடும்ப அரசோட அடையாளமாமா!!