இந்திய அணிகலன்கள்.

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.

பொருள் : நோயற்ற வாழ்வு கொண்ட மக்கள், நல்ல பொருளாதார வளர்ச்சி, நல்ல விளைச்சல், இன்பமான சூழல், சிறந்த பாதுகாப்பு. இவை ஐந்தும் ஒரு நாட்டின் அணிகலன்களாகப் போற்றப்படுகின்றன.

நோயற்ற வாழ்வு-ன்னா தலைவலி, ஜலதோஷம் கூட இல்லாததுன்னு இல்ல. காலரா, அம்மை மாதிரி அலை அலையா மக்கள கொல்ற நோய்கள் இல்லாதது.

எவ்ளோ பொருளாதார வளர்ச்சி இருந்தாலும், விளைச்சல் இருந்தாலும், மற்ற நாடுகளோட (தேவையில்லாம) போர் செய்யறதால இன்பமாப சூழல் இல்லாம போய்டுது. எப்போ எந்த ட்ரெயின்ல குண்டு இருக்குமோ, எந்த பஸ்ல பாம் வெடிக்குமோன்னு ஒரு பதட்டமான சூழல் உண்டாய்டுது.

அதுனால, இந்த சுதந்திர தினத்துல நம்ம நாட்டோட அணிகலன்கள எப்டி காப்பாத்தணும்-னு யோசிப்போமா?!?