இவங்களைத் தெரியுமா? – அட்வைஸ் அஞ்சுகம்.

நம்ம எல்லோரையும் சுத்தி இருக்கற சில ‘சிறப்பான’ குணங்கள் இருக்கறவங்களோட அடையாளங்கள சொல்றேன். உங்கள சுத்தியும் இப்படி யாராவது இருக்கறாங்களா-ன்னு சொல்லுங்க.

அட்வைஸ் அஞ்சுகம்.
இவங்ககிட்ட நீங்க எதப் பத்தி பேசினாலும் உங்களுக்கு அட்வைஸ்ஸ அள்ளி வழங்குவாங்க. நீங்க கேக்கலன்னாகூட அவங்களே பேச்ச ஆரம்பிச்சு அட்வைஸ் வழங்க ஆரம்பிச்சுடுவாங்க.

‘ஓ!! டி வி வாங்கப் போறீங்களா, Panasonic வாங்குங்க. இப்போ இருக்கற TV க்கள்ல அதுதான் பெஸ்ட்.’

‘மிக்ஸி வாங்கினா ABC-கம்பெனில வாங்கு. ரொம்ப ச்சீப்பா கொடுக்கறான்’.

‘நல்லிலயா பொடவ வாங்கினீங்க? ‘பல்லி’ல கம்மியான வெலைல கடைக்கறதா சொன்னாங்களே!!!’.

‘உன் மாமியார் உன்ன ஏன் இப்படித் திட்றாங்க? நீ ஒன்னுமே சொல்ல மாட்டியா??’

‘ஃப்ரெண்ட்டுக்கா கடன் கொடுக்கற? இப்டித்தான் என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தன் அவன் ஃப்ரெண்ட்டுக்கு கடன் கொடுத்துட்டு திரும்ப வாங்க ரொம்ப கஷ்டப்பட்டான்’

‘பிஸினஸ் ஆரம்பிக்கப்போறியா?? இப்படித்தான் என்னோட…’

அப்டின்னு எந்த விஷயம் பேசினாலும் அட்வைஸ்தான் அதிகமா இருக்கும்!!

நீங்க என்ன பிஸினஸ் ஆரம்பிக்கறீங்கன்னோ, உங்க ஃப்ரெண்ட்டுக்கும் உங்களுக்கும் உள்ள நட்பு பத்தியோ, உங்களுக்கும் உங்க மாமியாருக்கும் உள்ள உறவு பத்தியோ, எதுவும் இந்த அஞ்சுகங்களுக்குத் தெரியாது. அது அவங்களுக்கு அவசியமும் கெடையாது. ஒரு நாளைக்கு ரெண்டு மூனு பேருக்காவது நாலு அட்வைஸ் பண்ணலன்னா இந்த அஞ்சுகங்களுக்கு தூக்கமே வராது.

‘Panasonic TV வாங்கினா பாதி காசு நீ தரப்போறியா? உன்ன யாரு கேட்டா?’ அப்படிங்கற மாதிரி ஒரு பார்வ பாத்தீங்கன்னு வெச்சுக்கோங்க, ‘எல்லாம் உன் நல்லதுக்குதாம்ப்பா சொல்றேன்! நான் சொல்றத சொல்லிட்டேன்!! அப்புறம் உன் இஷ்டம்!!!’ அப்டீம்பாங்க.

இவங்களையெல்லாம் பாக்கும் போது, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்துல மாதவன் சொல்றமாதிரி வர்ற இந்த வசனம்தான் எனக்கு ஞாபகம் வரும்.

‘நீங்க எனக்கு நெறைய பண்ணியிருக்கீங்க. அதுக்கு நாங்க கடமைப் பட்டிருக்கோம். அதுக்காக இந்த Free Advice-ல்லாம் வேணாம்’

உங்களுக்கு?