இவங்களைத் தெரியுமா? – சுப்பீரியர் சுந்தரி

இவங்க தன்ன சுப்பீரியரா நெனைக்கறதுக்கு எதாவது ஒரு காரணம் எப்பவும் இவங்களுக்கு இருக்கும். கொஞ்சம் அதிகமா காசு, படிப்பு, அமெரிக்கா (அ) ஃபாரீன் வாசம், நுனி நாக்கு இங்லீஷ், அழகு, நீளமான தலைமுடி, நீலமான கண்ணு இப்டி ஏதாவது ஒன்னு.
யாராவது தன்னப் பத்தி பெருமையா பேசினா இவங்களுக்கு ரொம்ப சந்தோஷமாய்டும். அடுத்தவங்கிட்ட பேசும்போது தன்னோட பெருமைகளப் பத்தி பேசறது இவங்களுக்கு அல்வா சாப்டற மாதிரி. சாதாரணமா பேசறப்போகூட அவங்க பெருமைக்கு ஒரு அழுத்தம் இருக்கும்.
உதாரணமா.
‘போன வாரம் 1000 ரூபா சுனாமி நிதிக்காக கொடுத்தேன்’-ன்னு அவங்க கிட்ட சொன்னீங்கன்னு வெச்சுக்கோங்க, ‘அப்டியா! ரொம்ப சந்தோஷம்’ அப்டீன்னு சொல்லி நிறுத்த மாட்டாங்க. ‘நான் கூட SUN TV நிதிக்கு 10000 ரூபா அனுப்பி NEWS-ல கூட என் பேரு சொன்னானே பாக்கல?’ அப்டீம்பாங்க.
1000 ரூபா கொடுத்த சந்தோஷம் அந்த நிமிஷத்தோட காலி!!

கல்யாண வீட்டுக்கு போறது எதுக்கு? மணமக்கள வாழ்த்த. அங்க போயி, ‘இந்த நெக்லஸ பாத்தியா? பச்ச கல்லு நெக்லஸ் வாங்கணும்-னு ரொம்ப நாளா சொல்லி போன வாரம் தான் வாங்கினேன். நல்லாருக்கா?’ பெருமை பொங்க கேப்பாங்க.

கல்யாண சாப்பாடு நல்லா இருந்துச்சா அப்டீன்னு கேட்டீங்கன்னா, ‘நல்லா இருந்துச்சு’. ‘நம்ம ‘சோமு’தான சமயல். எங்க வீட்டு கல்யாணத்துலயும் அவன்தான். வந்திருந்தவங்கள்லாம் அசந்துட்டாங்கள்ல!!!’ அப்டீம்பாங்க.

‘நாங்க ஃபாரீன்ல, We eat a lotta Pizza, you know!!. இங்க கெடைக்கற பீஸால்லாம் Not that nize you know!!’ இது ஃபாரீன் சுந்தரியோட நுனி நாக்கு இங்லிஷ்.

அதிகமா படிப்பு இருக்கறவங்களுக்கு எப்டி சுப்பீரியர் நெனைப்பு வரும்-ன்னு கேட்கலாம். பெரிய படிப்பு படிச்சவங்க எல்லாரும் நல்ல அறிவாளியா இருக்கணும்-னு இல்லயே.
உதாரணமா, ‘ஓ.. ஆர்ட்ஸ்-ஸா, History-யா?’ ‘சயின்ஸ் இல்லயா?’ ‘என்ஜினியரிங் இல்ல?’ ன்னு ஹை டெக் சுந்தரிகள் கேக்கற ஸ்டைலே தனி ஸ்டைலா இருக்கும்.

இவங்க ஒரு டீமா (Team-ஆ) சேர்ந்து எதுவும் செய்ய மாட்டாங்க. அப்டியே செஞ்சாலும் முக்கியமான வேலைகளையெல்லாம் தான் செய்யணும்-னு நெனைப்பாங்க. முக்கியமா, மத்தவங்க செஞ்சத மனசார புகழ மாட்டாங்க!!

சுருக்கமா சொல்லணும்னா, எஜமான் படத்துல நெப்போலியன் சொல்ற இந்த வசனம் மாதிரி.

‘கல்யாண வீடா இருந்தா நாந்தான் மாப்ளையா இருக்கணும். எளவு வீடா இருந்தா நாந்தான் பொணமா இருக்கணும். மாலையும் மரியாதையும் எப்பவும் எனக்குத்தான் கடைக்கணும்’

நுனி நாக்கு இங்லிஷ் சுந்தரிகள பாக்கும்போது சில வருடங்களுக்கு முன்னாடி ஒரு தமிழ் சினிமா நடிகை சொன்னது ஞாபகம் வரும். ‘ஆங்கிலம்-ங்கறது ஒரு அறிவு இல்ல. ஒரு மொழி. அவ்ளோதான்’.

போட்டிருக்கிற நகைகள்ல பெருமை தேடற சுந்தரிகளப் பாக்கும்போது, ‘தில்லு முல்லு’ படத்துல தேங்காய் சீனிவாசன் பண்ற இண்ட்டர்வியூ ஞாபகத்துக்கு வரும்.
தேங்காய் : ‘அது என்னது? சட்டைல?’
சட்டைல பூனை படம் போட்டவர் : ‘பூனை சார்’ -ன்னு பெருமையோட சொல்ல,
‘அதுல என்ன பெரும? கெட் அவுட்!!’ அப்டீம்பாரு தேங்காய்!!